தமிழ்.பைபிள்
தமிழ் மொழி
இந்தியாவில் ஏறக்குறைய 68,700,000 பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதேபோல, உலகம் முழுவதிலும் 75,965,790 இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த இருத்தரப்பினரும் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். இந்தியாவில் தமிழ் மொழியானது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி – ஆகிய மாநிலங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இது இலங்கையில் பரவலாக பேசப்படுகிறது. பரிசுத்த வேதாகமம் முதலாவதாக 1727 ஆம் ஆண்டில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முதற்கொண்டு இந்திய வேதாகம மன்றத்தால் எல்லா மக்களும் பயனடைவர் என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையில் பரிசுத்த வேதாகமம் திருத்தப்பட்டது.
பலவிதமான தமிழ் வேதாகமங்களும் வெளியிடப்படுகின்றன:
பழைய பதிப்பில் (போவர் பதிப்பு), வேதாகமத்தின் பின்வரும் வகைகள் வெளியிடப்படுகின்றன: கிரவுண் அளவு, அரை காம்பாக்ட் அளவு (சிறிய அளவு வேதாகமங்கள்) டெமி அளவு, ராயல் அளவு (இது பெரிய எழுத்துக்களிலானது, காரணம், இதை மூத்த குடிமக்கள் பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர்), புல்பிட் அளவு (இது பிரசங்க பீடத்தில் வைக்கப்படலாம்) இது தவிர பிள்ளைகளுக்காகவும் பல வண்ண படங்கள் அச்சிடப்பட்ட வேதாகமமும் இதில் அடங்கும்.
மக்களின் பல தரப்பினர், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், குடும்பங்கள், மன உளைச்சலில் இருப்போர், நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோருக்காகவும் வேதாகமப் பகுதிகளை உள்ளடக்கிய புத்தகங்களும் சிற்றேடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட காரியங்கள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.
தமிழ்நாடு துணை அலுவலகம் (சென்னை துணை அலுவலகம், வேதாகமச் சங்கம்) மே மாதம் 20 ஆம் தேதி 1820 ஆம் ஆண்டு உருவானது. அத்துடன், துணை அலுவலகம் இருநூறாம் ஆண்டு கொண்டாட்டங்களை மே மாதம் 20 ஆம் தேதி 2020 ஆண்டில் கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டங்கள் மே மாதம் 20 ஆம் தேதி 2020 ஆண்டில் தொடங்க உள்ளது.
நீண்டகாலமாக, பல வகையான வேதாகமகங்கள் சியோலில் இருக்கும் கொரிய வேதாகமச் சங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. மார்க்கெட்டிங், புரொடக்ஷன் பிரிவுகளிலிருக்ககும் இயக்குனர்களின் பங்களிப்பினால் வேதாகமச் சங்கமானது கீழ்க்காணும் 3 வகையான கிளாசிக்கல் வேதாகமகங்களை தமிழ் மொழியில் கொண்டுவர இருக்கிறது. இதில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. 130 பக்க ஒத்துவாக்கிய பகுதியும் இதில் அடங்கும். வேதாகம் வாக்குதத்த வசனப்பகுதியும் இதில் உள்ளது. பலவண்ண நிலப்படங்களின் பகுதியையும் காணலாம். இதில் வேதாகம இடங்கள், பறவைகள், விலங்குகள், செடிகள், இசைக் கருவிகள், வேதாகமக் காலங்களில் உபயோகத்திலிருந்த பாத்திரங்கள் – ஆகியவற்றின் படங்களை காணமுடியும். இந்த சிறப்பு வேதாகமங்கள் சீனாவிலிருக்கும் ஏமிட்டி பதிப்பகத்தில் பதிப்பு செய்யப்படுகின்றன.
1. கிளாசிக் பிளஸ் ஒபன் கில்ட் வகை டெமி அளவு
2. கிளாசிக் பிளாஸ்டிக் ஜிப்புடன் கில்ட் வகை டெமி அளவு
3. கிளாசிக் பிளாஸ்டிக் பாண்டெட் லெதர் ஜிப்புடன் டெமி அளவு
நீண்ட காலமாக, சியோல் என்ற கொரிய பைபிள் சங்கத்திலிருந்து அச்சிடப்பட்டு, இறக்குமதி செய்யப்படும் தமிழ் வேதாகமங்களை நாம் பெறுகிறோம். இப்போது, எங்கள் மார்க்கெட்டிங், புரொடக்ஷன் இயக்குநர்களின் உதவியுடன், நாங்கள் பின்வரும் 130 தமிழ் பக்கங்கள் மற்றும் பைபிள் வாக்குறுதிகளின் பகுதியையும், பல இடங்களில் பைபிள் இடங்களின் மற்றொரு பிரிவையும் உள்ளடக்கிய, பறவைகள், விலங்குகள், தாவரங்கள், இசை கருவிகள் மற்றும் ஏமிட்டி பிரஸ், சீனாவில் அச்சிடப்பட்ட பைபிள் காலத்தின்
நாங்கள் என்ன செய்கிறோம்
இந்திய வேதாகமச் சங்கத்தின் தமிழ் ஆடியோ வேதாகமம் கேட்பதற்கு எப்படி இருக்கிறது?
தேவவார்த்தையை கேளுங்கள்