தமிழ்

தமிழ்.பைபிள்

தமிழ் மொழி

இந்தியாவில் ஏறக்குறைய 68,700,000 பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். அதேபோல, உலகம் முழுவதிலும் 75,965,790 இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்த இருத்தரப்பினரும் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். இந்தியாவில் தமிழ் மொழியானது ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி – ஆகிய மாநிலங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இது இலங்கையில் பரவலாக பேசப்படுகிறது. பரிசுத்த வேதாகமம் முதலாவதாக 1727 ஆம் ஆண்டில் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அது முதற்கொண்டு இந்திய வேதாகம மன்றத்தால் எல்லா மக்களும் பயனடைவர் என்ற உறுதிப்பாட்டின் அடிப்படையில் பரிசுத்த வேதாகமம் திருத்தப்பட்டது.

பலவிதமான தமிழ் வேதாகமங்களும் வெளியிடப்படுகின்றன:

பழைய பதிப்பில் (போவர் பதிப்பு), வேதாகமத்தின் பின்வரும் வகைகள் வெளியிடப்படுகின்றன: கிரவுண் அளவு, அரை காம்பாக்ட் அளவு (சிறிய அளவு வேதாகமங்கள்) டெமி அளவு, ராயல் அளவு (இது பெரிய எழுத்துக்களிலானது, காரணம், இதை மூத்த குடிமக்கள் பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர்), புல்பிட் அளவு (இது பிரசங்க பீடத்தில் வைக்கப்படலாம்) இது தவிர பிள்ளைகளுக்காகவும் பல வண்ண படங்கள் அச்சிடப்பட்ட வேதாகமமும் இதில் அடங்கும்.

மக்களின் பல தரப்பினர், குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள், குடும்பங்கள், மன உளைச்சலில் இருப்போர், நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோருக்காகவும் வேதாகமப் பகுதிகளை உள்ளடக்கிய புத்தகங்களும் சிற்றேடுகளும் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட காரியங்கள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன.

தமிழ்நாடு துணை அலுவலகம் (சென்னை துணை அலுவலகம், வேதாகமச் சங்கம்) மே மாதம் 20 ஆம் தேதி 1820 ஆம் ஆண்டு உருவானது. அத்துடன், துணை அலுவலகம் இருநூறாம் ஆண்டு கொண்டாட்டங்களை மே மாதம் 20 ஆம் தேதி 2020 ஆண்டில் கொண்டாடுகிறது. அந்த கொண்டாட்டங்கள் மே மாதம் 20 ஆம் தேதி 2020 ஆண்டில் தொடங்க உள்ளது.

நீண்டகாலமாக, பல வகையான வேதாகமகங்கள் சியோலில் இருக்கும் கொரிய வேதாகமச் சங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. மார்க்கெட்டிங், புரொடக்ஷன் பிரிவுகளிலிருக்ககும் இயக்குனர்களின் பங்களிப்பினால் வேதாகமச் சங்கமானது கீழ்க்காணும் 3 வகையான கிளாசிக்கல் வேதாகமகங்களை தமிழ் மொழியில் கொண்டுவர இருக்கிறது. இதில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன. 130 பக்க ஒத்துவாக்கிய பகுதியும் இதில் அடங்கும். வேதாகம் வாக்குதத்த வசனப்பகுதியும் இதில் உள்ளது. பலவண்ண நிலப்படங்களின் பகுதியையும் காணலாம். இதில் வேதாகம இடங்கள், பறவைகள், விலங்குகள், செடிகள், இசைக் கருவிகள், வேதாகமக் காலங்களில் உபயோகத்திலிருந்த பாத்திரங்கள் – ஆகியவற்றின் படங்களை காணமுடியும். இந்த சிறப்பு வேதாகமங்கள் சீனாவிலிருக்கும் ஏமிட்டி பதிப்பகத்தில் பதிப்பு செய்யப்படுகின்றன.

1. கிளாசிக் பிளஸ் ஒபன் கில்ட் வகை டெமி அளவு
2. கிளாசிக் பிளாஸ்டிக் ஜிப்புடன் கில்ட் வகை டெமி அளவு
3. கிளாசிக் பிளாஸ்டிக் பாண்டெட் லெதர் ஜிப்புடன் டெமி அளவு

நீண்ட காலமாக, சியோல் என்ற கொரிய பைபிள் சங்கத்திலிருந்து அச்சிடப்பட்டு, இறக்குமதி செய்யப்படும் தமிழ் வேதாகமங்களை நாம் பெறுகிறோம். இப்போது, எங்கள் மார்க்கெட்டிங், புரொடக்ஷன் இயக்குநர்களின் உதவியுடன், நாங்கள் பின்வரும் 130 தமிழ் பக்கங்கள் மற்றும் பைபிள் வாக்குறுதிகளின் பகுதியையும், பல இடங்களில் பைபிள் இடங்களின் மற்றொரு பிரிவையும் உள்ளடக்கிய, பறவைகள், விலங்குகள், தாவரங்கள், இசை கருவிகள் மற்றும் ஏமிட்டி பிரஸ், சீனாவில் அச்சிடப்பட்ட பைபிள் காலத்தின்

நாங்கள் என்ன செய்கிறோம்

இந்திய வேதாகமச் சங்கதச்தின் குறிக்கோள்:

கடவுளின் வார்த்தை அனைவரையும் சென்றடைய வேண்டும் – இதுவே எங்கள் குறிக்கோளாகும். இதை மனதில் வைத்துக்கொண்டு தனது மதிப்பு மிக்க சேவையை கடந்த 200 ஆண்டுகளாக இந்திய வேதாகமச் சங்கம் தொடர்ந்து செய்து வருகிறது. இந்திய நாட்டிலுள்ள அனைத்து சபைக்களின் கைப்பாவையாகவும் இந்திய வேதாகமச் சங்கம் இருந்து வருகிறது. அத்துடன், அவைகளின் தேவைகளை சந்தித்தும் வருகிறது. இலாப நோக்கமில்லாமல், இந்திய வேதாகமச் சங்கம் தன்னுடைய தெய்வீக சேவைகளை முழு அர்ப்பணிப்புடன் கடவுளின் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய வேதாகமச் சங்கத்தின் முக்கிய பங்களிப்புகள்:

மொழிபெயர்ப்பு பணி
தயாரிப்புப் பணி
விநியோகப் பணி

மொழிபெயர்ப்பு பணி

இந்தியாவில் ஏறக்குறைய 1852 மொழிகள் உள்ளன. இவையனைத்தும் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்றவன ஆகும். இந்த 1852 மொழிகளிலிருந்து, முழு வேதாகமமானது 72 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. மொழிபெயர்க்கப்படாத மொழிகள் இன்னும் நிறைய உள்ளன. இன்றைய உலகில், அநேக மக்கள் தங்களின் தாய்மொழிகளில் கடவுளின் வார்த்தையாகிய வேதாகமத்தை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்பதை நாம் கண்டுக்கொள்ள முடியும்.

வில்லியம் டின்டேல், ஜான் ஹஸ், வில்லியம் கேரி, மார்ட்டின் லூத்தர்
போன்ற கடவுளின் மக்கள் ஆரம்ப நாட்களில் தங்கள் வாழ்வையே கடவுளின் வார்த்தையின் மொழிப்பெயர்ப்பு பணிக்காக அர்ப்பணித்தனர். இவர்கள் கிறிஸ்துவின் பொருட்டு துன்பத்தை அனுபவித்து இரத்த சாட்சிகளாக மரித்தனர்.

இப்படி செய்ததன் மூலமாக தங்கள் வாழ்வின் முழுமையையும் கடவுளின் வார்த்தைக்காக இவர்கள் அர்ப்பணித்தனர். இவர்களில் பர்த்தலோமேயு சீகன்பால்கின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் ஆவார். 1706 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிலிருந்து மிஷினரியாக தமிழ்நாட்டிலுள்ள தரங்கம்பாடிக்கு அனுப்பப்பட்டார்.

பல தடைகள் இருந்தபோதிலும், தமிழ் மொழியை எழுதப் படிக்க பயின்றார். இதனால் அவர் புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிப்பெயர்க்க சாத்தியமாயிற்று. முதன்முதலாக, தமிழ் மொழியில் புதிய ஏற்பாட்டை 1711 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. சீகன்பால்கு அவர்களால் தொடங்கப்பட்ட மொழிப்பெயர்ப்பு பணியானது பெஞ்சமின் ஷூல்ஸ் என்பவரால் மிக சிறந்த முறையில் நிறைவடைந்தது. 1728 ஆம் ஆண்டில் இறுதியாக முழு வேதாகமும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது.

300 ஆண்டுகளுக்கு மேலாக நாம் நம்முடைய தாய்மொழியில் கடவுளின் வார்த்தையை வாசித்து, படித்து, தியானித்தும் வருகிறோம். பிறரும் இதே ஆசீர்வாதத்தை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக்கொள்வோமாக. மத்தேயு 14:16 ல் இயேசுவானவர் தம்மை நாடி வந்த மக்களின் மீது கரிசனைக் கொள்வதை நாம் காண்கிறோம். தம்முடைய சீடர்களை நோக்கி இவ்வாறு கூறுகிறார், “அவர்களுக்கு சாப்பிட கொடுங்கள்.” கடவுளின் வாழ்வளிக்கும் உணவை பிறருக்கு அளிக்க நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு மாபெறும் வாய்ப்பாக இருக்கிறது.

தயாரிப்பு (புரோடக்ஷன்) பணி

இந்திய வேதாகமச் சங்கம் திருமறையின் பதிப்புகளை சிறந்த வகைகளில் வெளியிடுகிறது. இதனால் பல இந்திய மக்கள் தங்கள் தாய்மொழியில் தாங்கள் விருப்பப்படும் வடிவமைப்பில் அதைப் பெற்றுக்கொள்கின்றனர்.

குறிப்பாக, சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, இந்திய வேதாகமச் சங்கம் நற்செய்தி பகுதிகளை உருவாக்குகிறது. அத்துடன், மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு, பல்வேறு தலைப்புகளுடன் அவர்களுடன் பேசும் திருமறைப் பகுதிகளையும் உருவாக்குகிறது. இவை பல்வேறு வடிவமைப்புகளில் உருவாக்கப்படுகின்றன. மேலும், கைப்பிரதிகளையும் அது உருவாக்குகிறது. சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் சிறந்த வேதாகமங்களையும் இது தயாரிக்கிறது. இவை பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆறுதலையும், ஆறுதலின் வசனங்களும் நிறைந்த கைப்பிரதிகளையும் கொண்டு வருகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் சந்திக்கும் பல்வேறு மருத்துவ பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டும் கைப்பிரதிகள் உருவாக்கப்படுகின்றன. இந்திய வேதாகமச் சங்கம் பாக்கெட் அளவில் கூட விசேஷித்த நூல்களை வெளியிடுகிறது. இவை மன அமைதியின்றி தவிக்கும் மக்களுக்காகவே உள்ளன. இந்த விசேஷ வேத நூல்கள் வல்லமை நிறைந்த கிருபை இரக்கம் ஆகியவற்றை தங்களுடன் கொண்டுள்ளன.

விநியோகப் பணி

இந்திய வேதாகமச் சங்கம் பல்வேறு வகைகளில் வேதாகமங்களை பிரசுரிக்கிறது. இவற்றை பதிப்புச் செய்து, குறைந்த விலையில் விநியோகிக்கிறது. இந்த விலைகள் அசலான பதிப்பிக்கும் விலைகளை விட சற்றே குறைந்த விலையில் தேவ பிள்ளைகளின் விருப்பத்துக்கு இணங்க விநியோகிக்கப்படுகின்றன. மக்கள் வேதாகமங்களை பெற விருப்பம் தெரிவிக்கும்போது அதை அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பும் மதிப்பிற்குரிய பணியை செய்து வருகிறது. இது விநியோகப்பணியினை சேர்ந்ததே ஆகும்.

இந்திய வேதாகமச் சங்கத்தின் தமிழ் ஆடியோ வேதாகமம் கேட்பதற்கு எப்படி இருக்கிறது?

தேவவார்த்தையை கேளுங்கள்